துப்பாக்கிச் சூடு எதிரொலியால், வாஷிங்டனில் உள்ள விமான தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

234

வாஷிங்டன் நகரத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் ஆண்ட்ரூஸ் விமான தளம் அமைந்துள்ளது. இங்கு துப்பாக்கி சூடும் பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்த விமான தளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி வருவதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் ஆண்ட்ரூஸ் விமான தள டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான தளம் தற்காலிகமாக மூடப்பட்டு, பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விமான தளத்தில்தான் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அதிகாரபூர்வ ஏர் போர்ஸ் ஒன் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.