வாஷிங்டன் நகரில் உள்ள பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவன் ஒருவன் உயிரிழந்தான்!

487

வாஷிங்டன் நகரில் உள்ள பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவன் ஒருவன் உயிரிழந்தான். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே ஸ்போகேன் கவுண்டி என்ற இடத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தநிலையில், பள்ளியில் வழக்கம் போல் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது, அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் மாணவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், மாணவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.