தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

297

கர்நாடகாவிலிருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால், தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த நீர் 2 நாட்களுக்குள் மேட்டூர் வந்தடையும் எனவும் மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது. அத்துடன் பவானிசாகர் அணை, அமராவதி அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரையும் சேர்த்து வினாடிக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி அளவுக்கு நீர் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல், டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கும் புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்திற்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.