தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – மத்திய நீர் வளத்துறை…

235

கர்நாடகாவில் கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.கபினி அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 55 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால்,மேட்டூர் அணையின் நீர்திறப்பு 25 ஆயிரம் கனஅடியில் இருந்து 30 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.எனவே, தமிழகத்தின் காவிரி கரையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சை ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர் வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.