போர் நினைவு சின்னத்தில் 100 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில், மிகப்பெரிய தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்.

265

போர் நினைவு சின்னத்தில் 100 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில், மிகப்பெரிய தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்.

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை விக்டோரியா ராணுவ நினைவிடத்தில், போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 100 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில் 24 மணி நேரமும் பறக்க கூடிய மிகப்பெரிய தேசிய கொடியை முதமைச்சர் ஜெயலலிதா ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில் தென் பிராந்திய ராணுவ தளபதிகளும் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.