அனைத்து இந்திய வக்பு வாரிய மாநாடு |வக்பு வாரிய புகார்களை விசாரிக்க ஒரு நபர் தீர்ப்பாயம்.

257

வக்பு வாரிய சொத்துகள் தொடர்பான புகார்களை விசாரிக்க ஒரு நபர் தீர்ப்பாயத்தை அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அனைத்து இந்திய வக்பு வாரிய மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வக்பு வாரிய சொத்துகள் தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்ட ஒரு நபர் தீர்ப்பாயத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது என்றார். மாநில அளவிலும் 24 தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், விரைவில் அனைத்து, மாநிலங்களும் தீர்ப்பாயங்களை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துவதாக தெரிவித்தார். மாநிலங்களில் வக்பு வாரிய சொத்துக்கள் அனைத்தும், இஸ்லாமிய சமூகத்தினரின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முக்தார் அப்பாஸ் நக்வி கேட்டுக்கொண்டார்.