வார்த் புயல் வரும் 12ம் தேதி நெல்லூருக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

221

வார்த் புயல் வரும் 12ம் தேதி நெல்லூருக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. வார்த் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல், அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரம் அடையும் என்று அவர் கூறினார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 1,060 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைக்கொண்ட வார்த் புயல், ஆந்திர கடற்கரையில் நெல்லூருக்கும் காக்கிநாடாவுக்கும் இடைய 12-ம் தேதி கரையை கடக்கும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார். இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அவர் கூறினார்.

புயல் காரணமாக எண்ணூர் மற்றும் நாகை துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.