விருத்தாசலம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கம்பர் வீதியில் வசித்து வருபவர் கன்னையன். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 சவரன் நகை, 80 கிராம் வெள்ளி மற்றும் 10ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.