2019 தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை..!

218

2019-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோவாளை தாலுகா அலுவலகத்தில் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது.

6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூரூவிலிருந்து கொண்டு வரப்பட்டன. தோவாளை தாலுக்கா அலுவலகத்தில் இந்த இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி அனைத்து அரசியல் கட்சிகள் முன்னிலையில் நடைபெற்றது. 2 ஆயிரத்து 340 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 4 ஆயிரத்து 300 வாக்குப் பதிவு இயந்திரங்களும், வாக்களித்த பின்னர் வாக்காளர்கள் தாங்கள் எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகை சீட்டு வழங்கும் கருவியும் பலத்த பாதுகாப்புடன் அனைத்து கட்சியினர் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது.