உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி, தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது!

292

உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி, தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலைக் குறிப்பிட்ட தேதிக்குள் நடத்த வலியுறுத்தி திமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட நான்குப் பேர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உச்தேசப் பட்டியலை மாநிலத் தேர்தல் ஆணையம் அளித்திருந்தது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு தேதிக் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமைத் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தலைமை நீதிபதி அமர்வு இல்லாத காரணத்தால் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.