மாநகராட்சி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

306

சென்னை, வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

சென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட துணை தேர்தல் அதிகாரி லலிதா வெளியிட்டார், இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். வரைவு பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என்றும் அதில் திருத்தங்கள் இருந்தால் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அலுவலர்களிடம் முறையிடலாம் என்றும் லலிதா தெரிவித்தார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ராமன், வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், அரக்கோணம், ராணிப்பேட்டை உட்பட 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

13 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 38 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ராமன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வினய் வெளியிட்டார். மாவட்டத்தில் புதிதாக 55 வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 2 ஆயிரத்து 04 வாக்குச்சாவடிகள் இருப்பதாக ஆட்சியர் வினய் கூறினார். இதேபோல, திருச்சி, கரூர், கிருஷ்ணகிரி உட்பட அனைத்து மாவட்டங்களில் இன்று திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் படடியல் வெளியிடப்பட்டுள்ளது.