தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்….!

403

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது.

2019 ஜனவரி 1ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், விடுப்பட்டவர்கள் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 654 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுப்பட்டவர்கள், மற்றும் புதிய வாக்காளர்கள் தங்களின் பெயர்களை இணைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.