டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும்-சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி!

445

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்
சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலனை தடுக்கும் வகையில், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு சுகாதார பணிகளை மாவட்ட ஆட்சியர் ரோகினி மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் ஒன்றரை லட்சம் துப்புரவு பணியாளர்களை கொண்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தனிநபர், அதை வீடியோ எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.