விசாகா உட்சவ் என்ற பெயரில் மலர்க்கண்காட்சி |130 வகையான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மலர்கள் …!

76

ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்று வரும் வருடாந்திர மலர்க் கண்காட்சியை ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்.

விசாகப்பட்டினம் பெருநகர மண்டல மேம்பாட்டு ஆணையம் சார்பில் விசாகா உட்சவ் visaka Utsav) என்ற பெயரில் இந்த வருடாந்திர மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து 130 வகையான, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மலர்கள், பூத்துக்குலுங்குகின்றன. மலர்களால் அமைக்கப்பட்டுள்ள மீன் வடிவம், பூக்களால் ஆன மயில் உருவம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. பல வண்ண நிறங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை பார்த்து ரசிக்கும் பார்வையாளர்கள், செல்பி எடுத்து கொள்ள தவறுவதில்லை. மலர்கள் மட்டுமின்றி, காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு வடிவங்களும், போன்சாய் மரங்களும் பார்வையார்களை கவர்ந்துள்ளன.