விவேகானந்தரின் 156வது பிறந்த நாள்

73

சுவாமி விவேகானந்தரின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உருவப்படத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார்.
1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை “தேசிய இளைஞர் நாளாக” ( National Youth day )அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் ஜனவரி 12-ம் தேதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனையடுத்து விவேகானந்தரின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் பிரதமர் மோடி, அலங்கரிக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படுத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்.