யூடிப்பில் அதிக லைக்குகளை பெற்று விவேகம் படத்தின் டீசர் உலக அளவில் புதிய சாதனை படைத்துள்ளது.

657

யூடிப்பில் அதிக லைக்குகளை பெற்று விவேகம் படத்தின் டீசர் உலக அளவில் புதிய சாதனை படைத்துள்ளது.
அஜித்குமார் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான விவேகம் படத்தின் டீசர், வெளியான 12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இதன்படி, அதிக பார்வையாளர்களை பெற்ற கபாலி டீசரின் சாதனையை விவேகம் டீசர் முறியடித்தது. இந்தநிலையில், யூடிப்பில் அதிக லைக்குகளை பெற்று விவேகம் படத்தின் டீசர் உலக அளவில் புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை, 5 லட்சத்து 74 ஆயிரம் லைக்குகளை எட்டி உலக சாதனை படைத்துள்ளது. ஸ்டார்வார்ஸ் தி லாஸ்ட் ஜெடி என்ற ஹாலிவுட் படத்தின் டீசர் 5 லட்சத்து 72 ஆயிரம் லைக்குகளை பெற்று முதல் இடத்தில் இருந்து வந்தது. இந்த சாதனையை தற்போது விவேகம் டீசர் முறியடித்துள்ளது.