பவானி ஆற்றின் குறுக்கே மேலும் 4 தடுப்பணைகள் | தமிழக விவசாயிகள் கவலை..!

377

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு மேலும் 4 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுத்து வருவதால், தமிழக விவசாயிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கேரள பவானி ஆற்றில், தேக்குவட்டை மற்றும் மஞ்சக்கண்டி ஆகிய இரு இடங்களில் கடந்த 4 மாதங்களுக்கு முன் இரண்டு தடுப்பணைகளை அம்மாநில அரசு கட்டியது. தற்போது மேலும் 4 தடுப்பணைகளை கட்டும் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக அப்பகுதியில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. கேரள அரசின் இத்தகைய நடவடிக்கையால், பவானி ஆற்றின் நீர்வரத்து குறைந்து, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்று அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.