நாளை நடைபெற உள்ள விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆதரவு அளிக்கும் என காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

251

நாளை நடைபெற உள்ள விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆதரவு அளிக்கும் என காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் விவகாரங்கள், கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது மற்றும் காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, சட்டசபை தலைவர் ராமசாமி, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நாளை நடைபெற உள்ள விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முழு ஆதரவு அளிக்கும் என சட்டசபை தலைவர் ராமசாமி தெரிவித்தார்.