வாடிப் போன வாழைகளை கண்டு விவசாயி அதிர்ச்சியில் மரணம் !

220

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சிக் காரணமாக வாடிய பயிர்களைக் கண்டு விவசாயிகள் அதிர்ச்சியில் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா, பரப்பாடியருகே உள்ள ஆனிகுளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆலிக்கம் இசக்கி. இவர் தனது 5 ஏக்கர் தோட்டத்தில் 5000 வாழைகளைப் பயிரிட்டுள்ளார்.
பருவ மழைப் பெய்யாதக் காரணத்தால் சரியான தண்ணீர் இல்லாமல் இசக்கி நிலத்தில் 2500 வாழைப் பயிர்கள் கருகிப் போய் விட்டன. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திணறி வந்த விவசாயி இசக்கி, வாடிப் போன வாழைகளைக் கண்டு அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார். இதனால் அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.