விவசாயிகளுக்காகப் போராட அகில இந்திய அளவில் போராட்டக் குழு !

232

விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகப் போராட அகில இந்திய அளவில் போராட்டக் குழு அமைக்கப்படும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் ஒருங்கிணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் 21-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் கலந்துக் கொள்வதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் ஒருங்கிணைப்பு விவசாய சங்கத்தினர் 15 பேர் , சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியிலிருந்து இன்று டெல்லிக்குப் புறப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று கூறினார்.