இந்தியா, சீனா எல்லைப் பாதுகாப்பு குறித்து விவாதம் !

230

இந்தியா, சீனா எல்லை நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜநாத் சிங் தலைமையில் ஐந்து மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இமய மலையை ஒட்டியுள்ள ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாசலப் பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களின் முதல்வர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்கின்றனர். இதில் இந்தியா, சீனா எல்லைப் பாதுகாப்பு, எல்லைப்புற பிரதேசங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியனக் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
மத்திய அரசுக்கும், 5 மாநிலங்களுக்கும் இடையே ஒட்டுமொத்த எல்லைப் பாதுகாப்பு தொடர்பான ஒருங்கிணைப்பை அதிகரிப்பதே இக்கூட்டத்தின் நோக்கம் என்று மத்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். இமய மலையையொட்டிய மாநில முதல்வர்கள் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.