கமல் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம்-2 படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது.

366

கமல் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம்-2 படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது.

கமல்ஹாசன் இயக்கி, நடித்த திரைப்படம் விஸ்வரூபம். இது 2013ம் ஆண்டு வெளியானது.
அதில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முதல்பாகம் எடுக்கும்போதே இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக பட குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், படம் 2015 ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட நிலையில் தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட சிக்கலால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம் போன்ற படங்களில் நடித்து முடித்த கமல், கடந்த ஆண்டு ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் விஸ்வரூம் – 2 படம் விரைவில் வெளியாகும் என அறிவித்த கமல், ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டியிருந்தார்.
விஸ்வரூபம்-2 படத்தின் இந்தி பாகத்தின் ட்ரெய்லரை நடிகர் அமீர்கான் வெளியிடுகிறார். தமிழ்ப் பாகத்தின் ட்ரெய்லரை கமல்ஹாசனின் மகளும், நடிகையுமாகிய ஸ்ருதிஹாசன் வெளியிடுவார் எனவும், தெலுங்கு ட்ரெய்லரை ஜூனியர் என்.டி.ஆர் வெளியிடுவதாகவும் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Vishwaroopam2 #rajkamal #kamalahasan #poojakumar