தடைகளை வென்று வெளியானது விஸ்வரூபம் 2 திரைப்படம்..!

316

கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 திரைப்படம் மூன்று மொழிகளில் இன்று வெளியானது.

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்திற்கும் பிரச்சனைகள் எழுந்தது. விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடக் கூடாது என்று வழக்குகளும் தொடரப்பட்டது. அவற்றை வென்று விஸ்வரூபம் 2 திரைப்படம் இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெளியானது. சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் ரசிகர்கள் பேண்ட் வாசித்தும் பட்டாசுகள் வெடித்தும் தங்கள் உற்சாகத்தை வெளிபடுத்தினர்.

கமல்ஹாசன் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு நடித்து வெளியாகும் முதல் படம் விஸ்வரூபம் 2 என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.