வேட்பு மனுவை நிராகரித்தாலும், ஆர்.கே.நகர் மக்களுக்கு நல்லது செய்வேன்-நடிகர் விஷால்!

396

தேர்தல் போட்டியிட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டாலும், ஆர்.கே.நகர் மக்களுக்கு நல்லது செய்வேன் என்று, நடிகர் விஷால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்த மனு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இந்திய தேர்தல் ஆணையம், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் விஷால் முறையிட்டார். அவரது மனுவை முன்மொழியவில்லை என்று கூறப்பட்ட இரு நபர்களுடன் 3 மணிக்குள் தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து விளக்கமளித்தால், வேட்பு மனுவை மீண்டும் பரிசீலனை செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இருவரும் ஆஜராகாத நிலையில், நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னை முன் மொழிந்தவர்கள் வீட்டிற்கு வெளியே யார் யாரோ பாதுகாப்பிற்கு நிற்பதாக குற்றம்சாட்டினார். வேட்பு மனு நிராகரிக்கப்பட்டாலும், ஆர்.கே.நகர் மக்களுக்கு நல்லது செய்வேன் என்றும் நடிகர் விஷால் குறிப்பிட்டார்.