தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து விரைவில் அறிவிப்பு -நடிகர் விஷால்!

429

தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிட இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது சுயசிந்தனையின் உந்துதலின் படியே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளார்.
தன்னை யாரும் இயக்கவில்லை என விளக்கம் அளித்துள்ள நடிகர் விஷால், தான் யாரையும் ஆதரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆதிக்க அரசியல் சக்திகளால் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு, தனது மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர்,
அரசியலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், தனது மக்கள் பணி தொடரும் என தெரிவித்துள்ளார்.
தனக்காகவும், நீதிக்காகவும் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள விஷால்,
அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.