நடிகர் விஷால் அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஷால் நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ளார். அவரது அலுவலகம் சென்னை வடபழனியில் அமைந்துள்ளது. இந்நிலையில், நடிகர் விஷாலின் வீடு மற்றும் பட நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளர் யாரும் இல்லாத நிலையில் சோதனை நடைபெறுவதாகவும், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மெர்சல் விவகாரத்தில் பாஜகவுக்கு விஷால் கண்டனம் தெரிவித்த நிலையில், வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Home Uncategorized நடிகர் விஷால் அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்!