ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிடுவதால் திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது-திருச்சி சிவா!

504

ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் போட்டியிடுவது திமுகவிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என திருச்சி சிவா கூறியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார். அதிமுக ஆட்சியை அகல வேண்டும் என்பதற்காகவே அனைத்து கட்சிகளும் திமுகவுடன் ஒன்றிணைந்து இருப்பதாக திருச்சி சிவா குறிப்பிட்டார். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவுக்கு ஆதரவு அளித்திருப்பது வரவேற்பதாக அவர் தெரிவித்தார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்றும், நடிகர் விஷால் போட்டியிடுவதால் திமுகவிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று திருச்சி சிவா கூறினார்.