எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாக்காலத்தில், நடிகர் சிவாஜிக்கும் இணையான மரியாதை கிடைக்க வேண்டும்-நடிகர் விஷால்!

261

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அடையாறில் சுமார் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. மணிமண்டபத்தை அக்டோபர் மாதம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் திறப்பதாக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியானது. இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து, சிவாஜி குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் உலகம் போற்றும் கலைஞனின் மணிமண்டபம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும்போது, மிகச்சிறப்பாக அமைய வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தமிழர்களின் கனவு என குறிப்பிட்டுள்ளார்.
இந்த கனவு முழுமையாக நனவாவது, முதலமைச்சர் மணிமண்டபத்தை திறந்து வைப்பதே கலைச்சிகரத்திற்கு செய்யும் சரியான மரியாதையாக இருக்கும் என கூறியுள்ளார்.
எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாக்காலத்தில், நடிகர் சிவாஜிக்கும் இணையான மரியாதை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும் என விஷால் தெரிவித்துள்ளார்.
மேலும், நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்பதை விஷால் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.