ரஜினி, கமலை போன்று தாமும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்..!

203

ரஜினி, கமலை போன்று தாமும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழக மக்கள் விரும்பும் மாற்றம் நிகழும் என்று உறுதிப்பட கூறினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் பிரவேசத்தை வரவேற்பதாக தெரிவித்த விஷால், இவர்கள் இருவரை போன்றும் தாமும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டபோதே அரசியலில் ஈடுபட முடிவு செய்துவிட்டதாகவும் விஷால் தெரிவித்தார். ரஜினிகாந்தின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்து அறிந்து கொள்வதற்கு தமிழக மக்களை போன்று தாமும் ஆவலுடன் காத்திருப்பதாக அவர் கூறினார்.