தமிழகத்தில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் : நடிகர் விஷால் கோரிக்கை

299

தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென, நடிகர் விஷால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, முதலமைச்சர் பழனிசாமிக்கு நடிகர் விஷால் எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கடிதத்தில், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களை போல கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வறுமையை போக்க கடன்களை ரத்து செய்து விவசாயிகளின் வாழ்க்கையை வளமாக்க வேண்டும் என்றும் நடிகர் விஷால் குறிப்பிட்டுள்ளார்.