கேளிக்கை வரியால் தமிழ் சினிமா பாதிக்கப்பட்டுள்ளது என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் வேதனை …!

819

கேளிக்கை வரியால் தமிழ் சினிமா பாதிக்கப்பட்டுள்ளது என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் விஷால், நடிகர்கள், நடிகைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மற்றும் சோ.ராமசாமி இருவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பழம்பெரும் நடிகைகள் காஞ்சனா, ஷீலாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச தீர்மானங்கள்
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 40% வரி செலுத்திவிட்டு சினிமா தொழில் நடத்த முடியாது என்றும் கேளிக்கை வரியால் தமிழ் சினிமா பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் அடுத்த டிசம்பருக்குள் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்றும் விஷால் உறுதியளித்தார்.