திருட்டு வி.சி.டியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் : விஷால்

257

திருட்டு விசிடியை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் எச்சரித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டவிரோதமாக இணையதளம் மூலம் படங்கள் பதிவிறக்கம் செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் திருட்டு வி.சி.டிக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். போராட்டத்தின் போது, படப்பிடிப்புகள் நடக்காது என்றும், திரைப்படங்களை ரீலிஸ் செய்ய மாட்டோம் என்றும் விஷால் கூறினார்.