நடிகர் விஷால் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

207

நடிகர் விஷால் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சங்க நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதாகக்கூறி நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் மனு தாக்கல்
செய்திருந்தார்.
அந்த மனுவில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது தாம் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார். எனவே, தம் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய தயாரிப்பாளர் சங்கத்துக்கு உத்தரவிடவேண்டும் என்றும் அந்த மனுவில் விஷால் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், சஸ்பெண்ட் செய்த பிறகும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை விஷால் தொடர்ந்து அவதூறகாக பேசி வருவதாக கூறினார். மேலும், விஷாவின் வருத்தத்தை ஏற்கக்கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.