ஐ.ஜி. மீது பெண் காவலர் பாலியல் குற்றச்சாட்டு..!

475

ஐ.ஜி. மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்கும் விசாகா கமிட்டி முதல் கூட்டம் நாளை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளன.

தமிழக காவல்துறையில் பெண் காவலர்களுக்கு ஏற்படும் பாலியல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க கடந்த சில நாட்களுக்கு முன் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி மீது, பெண் காவல் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரிக்க, கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழு அமைக்கப்பட்டது.

இதில் கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இதனிடையே பெண் காவல் அதிகாரி கொடுத்த புகாரை விசாரிக்க உள்ள விசாகா குழு நாளை கூடுகிறது. இதில் விசாரணையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்து ஆலோசினை நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.