விருதுநகர் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பெண்கள், கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

312

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. எற்கனவே ஜாதிக் கலவரம் ஏற்பட்ட அதே இடத்தில் இந்த டாஸ்மாக் கடை வைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஜாதிக் கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மது அருந்திவிட்டு அரைகுறை ஆடையுடன் விழுந்து கிடக்கும் குடிமகன்களை தாண்டியே பள்ளி, கல்லூரி மாணவியர் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.