விருத்தாசலத்தில் உரிய சிகிச்சை அளிக்காததால் இளைஞர் மரணம் அடைந்ததாக உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

159

விருத்தாசலத்தில் உரிய சிகிச்சை அளிக்காததால் இளைஞர் மரணம் அடைந்ததாக உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் காயமடைந்த பரணி என்ற இளைஞரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செவிலியர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இந்த நிலையில் காலதாமதமாக வந்த மருத்துவர், அந்த இளைஞரை சோதித்தபோது இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞரின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு நியாயம் கேட்டனர்.