விருதுநகர் சந்தை வளாகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல….

350

விருதுநகர் சந்தை வளாகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாயின.
விருதுநகர் தேசபந்து மைதானம் அருகேயுள்ள நகராட்சி சந்தையில் மின்கசிவினால் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 35 கடைகள் தீயில் எரிந்து சேதமடைந்தது. கடைகளில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமாயின. இந்த பொருட்களின் மதிப்பு சுமார் 80 லட்சம் ரூபாய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தினசரி வியாபரத்தை நம்பியுள்ள தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று சந்தை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.