அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

249

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நகராட்சி ஆணையராக பணிபுரிந்துவந்தவர் சென்னையைச் சேர்ந்த முத்து வெங்கடேஸ்வரன். இவர் தான் தங்கியிருந்த நகராட்சி பயணியர் விடுதி அறையில் வேட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசு ஊழியர்களும், நகராட்சி ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.