தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விராட் கோலி விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

256

தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விராட் கோலி விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் நாள் ஆட்டத்தின் போது காயமடைந்தார். எல்லைக்கோட்டை நோக்கி ஓடிய பந்தை பாய்ந்து விழுந்து தடுத்த போது, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. காயத்திற்கு சிகிச்சை பெற்றாலும் 4-வது டெஸ்டில் அவர் விளையாடவில்லை. மேலும் நூறு சதவீதம் உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே விளையாடுவேன் என்று சில வாரங்களுக்கு முன் கோலி அறிவித்திருந்தார். இதனால் ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெறும் ஐதாராபாத் பெங்களூர் ஆரம்ப போட்டியில் கோலி விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. ஆனால் விராட் கோலி வழக்கம் போல் விளையாடுவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.