ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசை பட்டியலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு லாராவை பின்னுக்கு விராட் கோலி சாதனை..!

1414

ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசை பட்டியலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு பிரையன் லாராவை பின்னுக்கு விராட் கோலி சாதனைப் படைத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசையில் 1985ஆம் ஆண்டு 935 புள்ளிகள் எடுத்த விவியன் ரிச்சர்ட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
1983ஆம் ஆண்டு 931 புள்ளிகள் எடுத்த ஜாகீர் அப்பாஸ் 2வது இடத்திலும், 1981ஆம் ஆண்டு 921 புள்ளிகள் பெற்ற கிரேக் சேப்பல் 3வது இடத்திலும் உள்ளனர்.
இந்தநிலையில், தரவரிசை பட்டியலில் 909 புள்ளிகள் எடுத்துள்ள விராட் கோலி, 24 ஆண்டுகளாக 908 புள்ளிகளுடன் 7வது இடத்திலிருந்த பிரையன் லாராவை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்துள்ளார்.