விராத் கோலி தமது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்!

738

விராத் கோலி தமது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11 ஆம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். நான்கு ஆண்டு காதலுக்கு பிறகு நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். புதுமண தம்பதியர் இன்று இந்தியாவுக்கு திரும்பியுள்ள நிலையில், மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பிரதமர் மோடியை கோலி சந்தித்து பேசினார். அப்போது, அவர்களுக்கு பிரதமர் மோடி திருமண வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை டெல்லி மற்றும் மும்பையில் நடத்துவதற்கு இருவரும் ஏற்பாடு செய்துள்ளனர்.