இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் !

455

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
நாக்பூரில் இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி அதிரடியாக ரன்களை குவித்தது. இந்திய வீரர்கள் முரளி விஜய், புஜாரா ஆகியோர் சதம் அடித்து அணிக்கு வலுச்சேர்த்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் புஜாராவும், கோலியும் தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் கோலி இரட்டை சதம் அடித்து அணிக்கு கூடுதல் வலுச்சேர்த்தனர். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் கோலி, 5-வது முறையாக இரட்டை சதம் அடித்து, மேற்கிந்திய வீரர் பிரைன் லாராவின் சாதனையை சமன் செய்தார்.
மற்றொரு வீரரான ரோகித் சர்மா அரைச்சதம் அடித்து அணிக்கு கூடுதல் ரன்களை சேர்த்தார். இலங்கை அணியின் பந்துவீச்சை, இந்திய வீரர்கள் சதுரியமாக எதிர்கொண்டு அதிரடியாக ரன்களை குவித்து வருகின்றனர்.