விராட் கோலியே ஒருநாள் போட்டியின் சிறந்த ஆட்டகாரர் : மைக்கேல் கிளார்க்

266

விராட் கோலியே உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா தொடர் குறித்த விவாத நிகழ்ச்சியில், இந்திய முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமன் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கலந்து கொண்டனர். இதில், பேசிய மைக்கேல் கிளார்க், இந்தியாவிற்கு எதிரான தொடர் ஆஸ்திரேலிய அணிக்கு சவாலாக இருக்கும் என்று தெரிவித்தார். விராட் கோலியே ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறிய அவர், ஸ்டீவ் ஸ்மித் டெஸ்டில் சிறந்த வீரர் என்று குறிப்பிட்டார்.