ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு : விராட் கோலி முதலிடம்

881

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில், இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் தரவரிசை பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்திருந்தார். இந்த நிலையில் 3-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் மீண்டும் முதலிடத்திற்கு விராட் கோலி உயர்ந்துள்ளார். புஜாரா மாற்றமின்றி 6-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். ஷிகர் தவான் 22-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.