விராலிமலை அருகே விபத்துக்குள்ளான காரில், சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!

813

விராலிமலை அருகே விபத்துக்குள்ளான காரில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வந்து கொண்டிருந்த அரசு பேந்தும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், காரில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்திற்குள்ளான காரை சோதனையிட்டனர். அப்போது காரில் மறைத்து வைத்திருந்த 7 கிலோ எடையுள்ள மரகதலிங்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. மரகதலிங்கத்தை கைப்பற்றிய போலீசார், கடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.