விரைவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்க முடிவு !

245

தமிழகத்தில் பழைய பேருந்துகளை மாற்றி 2 ஆயிரம் பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக போக்குவரத்துறை நல்ல உட்கட்டமைப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறிய விஜயபாஸ்கர், விரைவில் பழைய பேருந்துகளை மாற்றி 2 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்று குறிப்பிட்டார். போக்குவரத்துறையில் புதிய பணியிடங்களை தற்போது நியமிக்க போவதில்லை என்றும், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு குறித்த நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.