மறைந்த குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்திக்கு திரையுலக பிரமுகர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர்….

466

மறைந்த குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்திக்கு திரையுலக பிரமுகர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. வினுச்சக்கரவர்த்தியின் மறைவையொட்டி, திரையுலகினர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகர்கள் சிவகுமார், ஒய்.ஜி.மகேந்திரன், விஷால், கார்த்தி, பாண்டியராஜன், விவேக், பொன்.வண்ணன், பரோட்டா சூரி, வையாபுரி, நடிகை அம்பிகா, தேமுதிக கட்சியின் மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் போரூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.