இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது விநாயகர் சதுர்த்தி விழா..!

251

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சந்தைகளில் விநாயகர் சிலைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விளங்கும் விநாயகர் சதுர்த்தி விழா, இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளில் விநாயகர் சிலை வைத்து, அதற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து, கொளுக்கட்டை, சுண்டல் பழவகைகள் வைத்து படைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். இதனால், விநாயகர் சிலைகள் விற்பனை சந்தையில் சூடுபிடித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி சந்தையில் பழ வகைகள், மற்றும் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி, விளாம்பழம், கரும்பு உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. விநாயகர் வழிபாட்டில் முக்கியமானதாக கருதப்படும் அருகம்புல்லும் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. 10 நாட்கள் தொடர் வழிபாட்டிற்கு பிறகு, விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.