விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

273

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டம் சுக்காலியூர் பகுதியை அடுத்த கருப்பம்பாளையம் கிராமத்தில் இந்து முன்னனி கட்சியின் நிர்வாகியாக இருப்பவர் ரமேஷ். இவர் கடந்த 15 ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். எதிர்வரும் 6 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை அடுத்து இவர் தற்பொழுது சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சிலையின் பாகங்களை ஒருங்கிணைத்து, 1 அடி முதல் 15 அடிவரையிலான பல வகையான விநாயகர் சிலைகளை இவர் தயாரித்து வருகிறார். எந்த வேதிப்பொருளும் கலக்காமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மூலப்பொருட்களைக் கொண்டு சிலைகள் தயாரித்து கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.