விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை ஒட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் விற்பனைக்காக சிலைகள் குவிக்கப்பட்டுள்ளன.

225

விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை ஒட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் விற்பனைக்காக சிலைகள் குவிக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. ஒசூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து இந்த சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ரசாயணம் கலக்காத கிழங்கு மாவினால் செய்யப்பட்ட சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகளில் கரைக்கும்போது, மாசு படியாமலும், எளிதில் கரையும் வகையிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அரை அடி முதல் 13 அடி வரை உள்ள இந்த சிலைகள், 50 ரூபாய் முதல் 13 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட உள்ளதாக விற்பனையாளர் தெரிவித்தார். இந்த ஆண்டு புதுவரவாக ஜிகினா பூசப்பட்ட விநாயகர், நரசிம்மர் போன்ற சிலைகள் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.